இந்த 40+ வருட திரை வாழ்க்கையில் சில கிளாஸ் படங்களில் நடித்திருந்தாலும், ரஜினி என்றால் முதன்மையாக நினைவிற்கு வருவது அவரின் மாஸ் படங்களே.
ரஜினியை எளிதாக மாஸ் ஹீரோ என்று சொல்லி விடலாம். ஆனால் பார்வையாளனின் நாடி துடிப்பை அறிந்து ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் காட்டி மாஸ் வேலைகள் செய்வது என்பது தான் அந்த மாஸ் ஹீரோவின் கை வந்த கலை.
உதாரணமாக, ஒரு நடிகன் தான் நடிக்கும் படத்தில் Double acting செய்து அந்த இரண்டு கதாபாத்திரங்களுக்கும்(Dual role) வித்தியாசம் செய்து நடிப்பது என்பது சரி, ஆனால் ஒரே கதாபாத்திரத்தில்(Single Characterization) அந்த பாத்திரத்தின் இரு வேறு தன்மைகளுக்கு (both the extreme) சென்று அதிக படங்கள் நடித்து Entertain செய்தது ரஜினியாக தான் இருக்க முடியும். அவற்றுள் சில : பில்லா(பெண்தன்மை கொண்ட ஒருவன் பிறகு அதிரடி டானாக மாறுவது),
தில்லு முல்லு(அமைதியான இந்திரன்- அலப்பறை செய்யும் சந்திரன்), தளபதி (நட்பின் இருப்பை உணர்ந்தவன் - தாய் பாசத்திற்கு ஏங்குபவன்), அண்ணாமலை(பால்கார வெள்ளந்தி - பணக்கார கோபக்காரன்), பாட்ஷா(சாந்தமான மாணிக்கம் - ஆக்ரோஷமான பாட்ஷா), பாபா(நாத்திகன் - ஆத்திகன்), எந்திரன்(சமத்து இயந்திர சிட்டி - மனித வில்லன் 2.0), பேட்ட(கலகல வார்டன் காளி - நெருப்பு கேங்ஸ்டர் பேட்டவேலன்).
அதே போல் கதாபாத்திரங்களை தேர்வு செய்வதில் இருக்கும் தெளிவு இவரிடம் மற்ற மாஸ் நடிகர்கள் கற்று கொள்ள வேண்டும். பாட்ஷா தந்த மாபெரும் வெற்றியில் இவர் நினைத்து இருந்தால் மறுபடியும் பல டான் கேரக்டர்களை செய்திருக்கலாம், திருப்பி திருப்பி அதை செய்து டான் கதாபாத்திரத்தின் மீது வெறுப்பையும் அனைவருக்கும் சலிப்பையும் உண்டாக்கியிருக்கலாம். ஆனால் ரஜினியோ பாட்ஷா வெளிவந்தது 20 வருடம் கழித்து தான் கபாலியில் டான் கேரக்டரை செய்தார். இன்று வரை தமிழ் சினிமாவின் ஆகச் சிறந்த டான் கதாபாத்திரம் என்றால் அது பாட்ஷா தான் என்பதை தமிழ் சினிமா அறிந்த நியதி. புதிதாக ஒரு டான் கதாபாத்திரத்தை ஒரு இயக்குனர் வடிவமைக்கிறார் என்றாலோ அல்லது ஒரு நடிகர் டானாக நடிக்க தயாராகிறார் என்றாலோ அது பாட்ஷா வை முன்மாதிரியாக வைத்தே நடக்கும். ரீமேக் படங்கள் செய்தாலும் நடிப்பில் தன் ஸ்டைல், பஞ்ச்டைலாக் என எல்லாமே தன் பாணியில் அமைத்தது இவரின் யுக்தி.
Thats why He always being constant as greatest Mass entertainer for three more decades.
- Prem ❤