Thursday, May 26, 2022

சில்லுக் கருப்பட்டி (2019) :


நான்கு கதைகள். நான்கு விதமான காதல்கள். ஒவ்வொரு கதையிலும் சொல்லப்படும் காதலின் மேன்மைகள். அதற்கு சிறப்பு சேர்க்கும் அழகான வசனங்கள். ஒவ்வொரு கதைகள் பார்த்து முடிக்கும் போது காதல் கவிதைகளை வாசித்த உணர்வுகள். இவை தான் சில்லுக்கருப்பட்டி.


தன் முந்தைய படமான பூவரசம் பீப்பீயில் குழந்தைகளை மையப்படுத்தி கதைகளத்தை அமைத்த இயக்குனர் ஹலிதா ஷமீம் காதலை கதைக்களமாக கொண்ட இப்படத்திலும் குழந்தைகளை சரியாக பயன்படுத்தியிருக்கிறார். சூழ்நிலைகளை மட்டுமே வில்லன்களாகவும் படத்தில் வரும் கதாபாத்திரங்களைகளை வில்லன்களாக சித்தரிக்காமல் நல்ல மனிதர்களை படம் முழுக்க தந்திருக்கிறார். அவர்கள் பேசுவதில் இருக்கும் நகைச்சுவை, நுணுக்கமான மனித உணர்வுகள், ரியாலிட்டி என வசனங்கள் அனைத்தும் அருமை. 


World of Sillu Karupatti :

1. Pink Bag : டீன்ஏஜ் காதல். தான் கொடுக்கும் அன்பு திருப்பி கிடைக்குமா என்று எதையும் எண்ணிப்பார்க்காமல் எந்த எதிர்பார்ப்புமின்றி பதின்மவயது சிறுவன் தனக்கு பிடித்த பெண்ணுக்கு காதல் ஈர்ப்பால் செய்யும் செயல்களே இக்கதை. 


2. காக்கா கடி : இள வயது காதல்‌. அன்பொன்று கிடைத்துவிட்டால் வாழ்வின் எந்த துயரத்திலும் இருந்து மீண்டு வந்து விடலாம் என்பதை உணர்த்தும் கதை. 


3. Turtles : முதிர் பருவ காதல்‌. எந்த வயது ஆனாலும் சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ள ஒரு துணை தேவை என்கிற மகத்துவத்தை சொல்லும் கதை‌.


4. Hey அம்மு : தம்பதிகளுக்கு இருக்கும் காதல்‌. கல்யாணம் ஆகி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டும் கருத்து வேறுபாடுகளின் பல ஏற்பட்டினும் அதை ஆராய்ந்து ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து காதலில் திளைக்க வேண்டும் என்று ஊடல் மூலமாக காட்சிகள் அமைந்த கதை.


இந்த நான்கு கதைகளும் உயிர்ரோட்டமாக இருக்க பெரிதும் துணையிருப்பது இசை. இப்படத்தின் இசையமைப்பாளரான பாடகர் பிரதீப்குமார் படம் முழுக்கவே மென் இசையோடு சேர்த்து மதி மயக்கும் தன் குரலில் ஹம்மிங் மூலமாக உயிர் கொடுத்தும் இருக்கிறார். இதற்கு உறுதுணையாக முதன்மை கதாபாத்திரங்களின் நடிப்பும், ஒவ்வொரு கதைக்கும் வெவ்வேறு ஒளிப்பதிவாளர்களின் விதவிதமான வண்ணங்களும் இதை எல்லாம் ஒன்று சேர்த்த ஹலிதாஷமீமின் எழுத்தும் இயக்கமும் படத்தை ரசிக்க வைக்கிறது.


-  Prem ❤

 

Monday, December 6, 2021

Her (2013) :


Her என்ற இந்த மாயநதியை பார்த்த போது ஒவ்வொரு நிமிடங்களிலும் இதில் மூழ்கி போனேன். இதன் ஓட்டத்தில் லயித்து மயங்கி போனேன்‌. காதலின் உன்னதத்தை இவ்வளவு நேர்த்தியாக மனிதர்கள் மற்றவர்களாக படத்தில் இருந்தாலும் முதன்மை கதாபாத்திரமாக ஒருவரை மட்டும் வைத்து வந்த அழகான காதல் திரைப்படம்.

தனிமையில் உழன்று கொண்டிருக்கும் ஒருவனுக்கு தன் எண்ணங்களை பகிர, தான் பேசுவதை கேட்க, பேசும்போது உடன் உச்சு கொட்ட, கேள்விகளுக்கு சரியோ தவறோ ஏதேனும் ஒன்றை பதிலாக சொல்ல, சிரிக்க,அழ என துணைக்கு ஒரு நபர் கிடைத்தால்? இவன் செய்வதை போலவே அந்த இரண்டாம் நபரும் இவனுக்கு திருப்பி செய்தால்? அந்த இரண்டாம் நபர் ஒரு மெஷினாக(Programmed Software) இருந்தால்? அவனுக்கும் அந்த மெஷினுக்கும் காதல் மலர்ந்தால்? பேசி பேசியே Romance நிகழ்ந்தால்? தொட்டு பேசி கொள்ள வேண்டும் என்று ஏக்கம் வந்தால்? காதலில் Possessiveness எட்டி பார்த்தால்? காமம் இணைந்தால்? கடைசியில் பிரிந்தால்? இப்படி பலதரப்பட்ட கேள்விகளுக்கான விடையே Her.

காதலுக்கு நிஜம் - கற்பனை தேவையில்லை.
அருகாமை தேவையில்லை. உடல் தேவையில்லை. மனிதனின் எண்ணத்திலும் உணர்விலும் ஒன்று கலக்க ஒரு X Factor போதுமானது என்பதை படம் சொல்கிறது, அந்த X Factorஆக இயந்திரம் அமைகிறது. இதன் மூலம் காதலின் உச்சக்கட்டத்தை மனிதன் அடைகிறான். இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் இவ்வகையான காதலும் சாத்தியமே.

பேசி பேசியே காதல் வளர்ப்பது என்பது மனித இனத்தின் ஆகச்சிறந்த ஆற்றல். அந்த ஆற்றலில் சொக்கி -ஆழ்ந்து - நிலையற்று -  தொலைதூர எல்லைக்கு சென்று வெற்றி/ தோல்வி காண்பதிலே மனிதன் சுழன்று கொண்டிருக்கின்றான். இரு மனிதர்களுக்குள் காதல் நிகழ்வது போலவே ஒரு மனிதனுக்கும் Operating System கும் காதல் மொட்டாகி, துளிர்விட்டு, அரும்பாகி,மலர்ந்து,பூப்பூத்து, இறுதியில் வாடி உதிறுகிறது‌. இந்த நிகழ்வுகளின் பயணமே இப்படம்‌.

படத்தை அபாரமான நடிப்பால் தன் தோளில் சுமந்த Joaquin Phoenix ❤❤. சலனமில்லாத பிண்ணனி இசை & பல காட்சிகளில் இசையை ஒலிக்காமல் மௌனமாக விட்டதும், ஒரே நபர் அடிக்கடி ப்ரேமில் வந்தாலும் சலிப்பு தட்டாமல் அமைந்த ஒளிப்பதிவும் 👏👏.

படம் சொல்லவருவது "காதலின்றி மண்ணில் இன்பம் ஏதடா?".

- Prem ❤

Wednesday, September 1, 2021

Annayum Rasoolum (2013) :



பொதுவாக காதல் திரைப்படங்களில் சொல்லப்படும் காதல்கள் எல்லாம் காதலன் காதலி இருவரும் காதலித்து கடைசியில் சேர்தல் அல்லது பிரிதல் என்பதை பற்றி தான். ஆனால் அதை சொல்லும் விதத்தில் தான் ஒரு சில படங்கள் மற்ற படங்களை விட தனித்து தெரிகிறது. அப்படி காதலை பற்றி தனித்துவமான விதத்தில் சொன்ன படம் தான் Annayum Rasoolum .

அன்னாவைவை பார்த்தவுடனே ரசூலுக்கு காதல்‌ வருகிறது Normal ஆக. பிறகு அவன் தன் காதலை அவளிடம் சொல்கிறான் Natural ஆக. ஆரம்பத்தில் அவள் மறுக்கிறாள் default ஆக. பிறகு ஒரு சூழலில் அவள் அதை ஏற்கிறாள் Asusual ஆக. இருவருக்கும் காதல் மலருகிறது Common ஆக. இருவரும் காதலில் திளைக்கிறார்கள் Frequent ஆக. இந்த காதலை அறியும் அன்னாவின் குடும்பம் எதிர்ப்பு தெரிவிக்கிறது Typical ஆக என ஏற்கனவே பல காதல் படங்களில் General ஆக சொல்லப்பட்ட இக்காட்சிகள், இதில் புதுமையாகவும் தொய்வில்லாமலும் செல்வதற்கு முக்கிய காரணம் படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் Super ஆக நடித்த இருவரே.

ரசூலாக பகத் பாசில். இவரை Frameக்குள் வைத்து விட்டாலே போதும் மற்ற விஷயங்களை பற்றி பார்க்க விடாமல் தன் நடிப்பின் மூலமாகவே பார்த்து கொண்டிருப்பவர்களை கட்டி போட்டு வைக்கும் ஆற்றல் நிறைந்த அசாத்திய நடிகன். 

அன்னாவாக ஆண்டிரியா. படம் முழுக்கவே புடவையில் வலம் வந்து தன் சின்ன சின்ன முகபாவங்களின் மூலமாக அவ்வளவு அழகாக இருப்பார். இதுவரை இவர் நடித்த படங்களில் சிறந்த படம் என்றால் இது தான் சொல்ல வேண்டும். எதிரில் இருக்கும் பகத் பாசிலுக்கு ஈடு கொடுத்து அனாவின் பாத்திர படைப்பையும் உள்வாங்கி ரொமன்ஸ் செய்து என அவ்வளவு இயல்பாக நடித்திருப்பார்.

படத்தில் ஆகச்சிறந்த உருவாக்கம் எது என்றால் ரசூல் அன்னாவை Approach செய்யும் விதமே. தவிப்பு, காதல், ஏக்கம், சந்தோஷம், குற்ற உணர்வு என எல்லாமும் தாண்டவம் ஆடும் பகத்தின் நடிப்பும் அதை இயக்குனர் காட்சி படுத்திய விதமும் Too Good 👌👌.

கொச்சி Fort ஐ சுற்றியுள்ள லொக்கேஷன், படகுத்துறை, Small town ல் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்கள் ரம்மியமான இசை என படத்தில் அமைந்த கூடுதல் சிறப்புகள்.

படம் கொஞ்சம் மெதுவாக நகர்ந்தாலும் காதலை அழகாக இயல்பாக சொன்ன விதத்தில் மலையாள சினிமாவில் வந்த மற்றொரு அழகான பீல் குட் திரைப்படம்‌..

- Prem ❤

Monday, August 9, 2021

Rajinism



இந்த 40+ வருட திரை வாழ்க்கையில் சில கிளாஸ் படங்களில் நடித்திருந்தாலும், ரஜினி என்றால் முதன்மையாக நினைவிற்கு வருவது அவரின் மாஸ் படங்களே.
ரஜினியை எளிதாக மாஸ் ஹீரோ என்று சொல்லி விடலாம்‌. ஆனால் பார்வையாளனின் நாடி துடிப்பை அறிந்து ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் காட்டி மாஸ் வேலைகள் செய்வது என்பது தான் அந்த மாஸ் ஹீரோவின் கை வந்த கலை.

உதாரணமாக, ஒரு நடிகன் தான் நடிக்கும் படத்தில் Double acting செய்து அந்த இரண்டு கதாபாத்திரங்களுக்கும்(Dual role) வித்தியாசம் செய்து நடிப்பது என்பது சரி, ஆனால் ஒரே கதாபாத்திரத்தில்(‍Single Characterization) அந்த பாத்திரத்தின் இரு வேறு தன்மைகளுக்கு (both the extreme) சென்று அதிக படங்கள் நடித்து Entertain செய்தது ரஜினியாக தான் இருக்க முடியும். அவற்றுள் சில : பில்லா(பெண்தன்மை கொண்ட ஒருவன் பிறகு அதிரடி டானாக மாறுவது),
தில்லு முல்லு(அமைதியான இந்திரன்- அலப்பறை செய்யும் சந்திரன்), தளபதி (நட்பின் இருப்பை உணர்ந்தவன் - தாய் பாசத்திற்கு ஏங்குபவன்), அண்ணாமலை(பால்கார வெள்ளந்தி - பணக்கார கோபக்காரன்), பாட்ஷா(சாந்தமான மாணிக்கம் - ஆக்ரோஷமான பாட்ஷா), பாபா(நாத்திகன் - ஆத்திகன்), எந்திரன்(சமத்து இயந்திர சிட்டி - மனித வில்லன் 2.0), பேட்ட(கலகல வார்டன் காளி - நெருப்பு கேங்ஸ்டர் பேட்டவேலன்).

அதே போல் கதாபாத்திரங்களை தேர்வு செய்வதில் இருக்கும் தெளிவு இவரிடம் மற்ற மாஸ் நடிகர்கள் கற்று கொள்ள வேண்டும். பாட்ஷா தந்த மாபெரும் வெற்றியில் இவர் நினைத்து இருந்தால் மறுபடியும் பல டான் கேரக்டர்களை செய்திருக்கலாம்‌, திருப்பி திருப்பி அதை செய்து டான் கதாபாத்திரத்தின் மீது வெறுப்பையும் அனைவருக்கும் சலிப்பையும் உண்டாக்கியிருக்கலாம். ஆனால் ரஜினியோ பாட்ஷா வெளிவந்தது 20 வருடம் கழித்து தான் கபாலியில் டான் கேரக்டரை செய்தார். இன்று வரை தமிழ் சினிமாவின் ஆகச் சிறந்த டான் கதாபாத்திரம் என்றால் அது பாட்ஷா தான் என்பதை தமிழ் சினிமா அறிந்த நியதி. புதிதாக ஒரு டான் கதாபாத்திரத்தை ஒரு இயக்குனர் வடிவமைக்கிறார் என்றாலோ அல்லது ஒரு நடிகர் டானாக நடிக்க தயாராகிறார் என்றாலோ அது பாட்ஷா வை முன்மாதிரியாக வைத்தே நடக்கும்‌. ரீமேக் படங்கள் செய்தாலும் நடிப்பில் தன் ஸ்டைல், பஞ்ச்டைலாக் என எல்லாமே தன் பாணியில் அமைத்தது இவரின் யுக்தி.

Thats why He always being constant as greatest Mass entertainer for three more decades.

- Prem ❤

Tuesday, June 22, 2021

தர்மதுரை (2016) :


படத்தில் மூன்று விதமான காதல் உணர்வுள்ள பெண்கள் ஒரு ஆணின் வாழ்க்கையின் வெவ்வேறு காலகட்டங்களில் வருகிறார்கள். 

1. ஸ்டெல்லா: தான் விரும்பும் ஆண் நண்பனிடம் வெளிப்படையாக தன் காதலை சொல்பவள்.
2. சுபாஷிணி: தன் காதலை தனக்குளே மறைத்து வைத்து அந்த ஆணுடன் நட்புடன் பழகுபவள்.
3. அன்பு செல்வி: தன்னை பிடித்ததாக வந்து சொல்லும் தனக்கு ஓரளவுக்கு பரிச்சியப்பட்ட ஆணிடம் தன் அப்பாவின் கல்யாண சம்மதத்துடன் காதலிக்கும் கிராமத்துப் பெண்.
- இந்த மூவரையும் நன்றாக புரிந்து கொள்ளும் தர்மதுரை, ஸ்டெல்லாவிடம் தன் இள வயதையும் சூழ்நிலையையும் எடுத்து சொல்லி எதிர் காலத்தில் உனக்கு இதே அன்பு என் மேல் இருந்தால் அப்போது திருமணம் செய்து கொள்ளலாம் என்பதும், சுபாஷிணி தன் கணவனை பிரிந்து வாழ்ந்தாலும் அவள் கல்லூரியில் தன்னை ஒரு தலையாய் காதலித்தாக தெரிந்த பிறகு அதனுடே இனி நாம் living together வாழ்க்கை வாழலாம் என்பதும், அன்பு செல்வியின் ஆசைபடியே பெண் பார்க்கும் படலம் முடிந்து பெற்றோர் சம்மதத்துடன் முழுமையாக காதலிப்பது என தர்மதுரை  Mature ஆக கையாள்வது என ஆண்-பெண் உறவு, காதல், உளவியல் தான் இந்த படத்தின் ஆகச் சிறந்த சிறப்பு. 

படத்தை தன் தோளில் சுமப்பது விஜய் சேதுபதி. தன் வாழ்க்கையில் நிகழும் Active - inactive, Pause - restart, மூன்று பெண்களின் காதலை கையாளும் விதம் என பல்வேறு நிலைகளை நடிப்பால் வெளிப்படுத்தியிருப்பார். தன் மகன் வாழ்க்கையை வெறுத்து தோல்வியில் இருக்கும் போது அவனுக்கு துணை நிற்பதும், தன் மகன் கோபத்தில் கொலை செய்ய துணியும் போது அவனை தடுத்து கட்டியணைத்து ஆறுதல் படுத்துவதும், மற்றவர்களால் தன் மகன் உயிருக்கு ஆபத்து வரும் போது அவனை வீட்டை விட்டு வெளியேற்றி அவனை காப்பாற்றுவதும் என ராதிகா ஒரு கிராமத்து தாயை அவ்வளவு அழகாக நடித்திருப்பார்.

மேலும் படத்தில் இலவச மருத்துவம், மருத்துவர்களின் கண்ணியம், மாணவர்களுக்கு ஆசிரியர் மேல் இருக்கும் மரியாதை, அந்த ஆசிரியருக்கு காமராஜர் மேல் இருக்கும் மரியாதை, பெண்ணின் அன்பால் குடி பழக்கத்தில் இருந்து மீண்டு வருவது,திருநங்கையின் கஷ்டம்,மறுமணம், கால்நடைகள்,மலைகிராமம், கிராமத்தின் எளிய மக்கள், கோயில்கள்,வயல்வெளி, நூலகம், கணவாய் என இவ்வளவையும் விரிவாக Nativity + geography சேர்த்து தந்த சீனு ராமசாமி சமகால இயக்குனர்களின் ஆக சிறந்த படைப்பாளி..

- Prem ❤

Monday, June 14, 2021

பருத்திவீரன் (2007) :



ஒரு கிராமம் - அதற்குள் இருக்கும் பொட்டல் காடு,ஆலமரங்கள்,செம்மண் புழுதி,ஆட்டுக்குட்டிகள்,சிறுதெய்வ வழிபாடு,கிராமிய கலைகள்,பனைமரங்கள்,ஓலை குடிசைகள்,மாட்டு வண்டிகள்,கருமேகம்,சுட்டெரிக்கும் சூரியன்,மீசை வைத்த தலைப்பாக்கட்டுகள்,அலப்பறை செய்யும் இளவட்டங்கள்,அப்பாவி தாய்மார்கள்,அப்பத்தாக்கள்,கரிசல் நிலம்,திருவிழா,மக்களின் பேச்சுவழக்கு,அரிவாள்,சட்டம் என அந்த கிராமத்தில் நம்மையும் கூட சேர்த்து உலாவவிட்ட படம் என்றால் அது பருத்திவீரன் தான்.

இப்படிப்பட்ட கிராமத்து சூழலில் ஒரு உயிரோட்டமான காதல் - அதை சுற்றி பின்னப்பட்ட சாதி வெறி - அதனூடே நடக்கும் வெட்டு குத்து,கொலை,ரத்தம் என படம் பேசிய விஷயங்கள் ஏராளம்.

ஒரு பெண்ணின் மேல் ஆண் காதல் கொண்டு அவளின் பின்னால் சுற்றி வருவது,அவள் மேல் தீவிரமாக இருப்பது என்பது தான் பல படங்களில் பார்த்திருப்போம். ஆனால் இதில் முத்தழகு தன் அறியா பருவத்தில் முளைத்த காதலால் பருத்திவீரன் பின்னால் கங்கணம் கட்டிக் கொண்டு இருப்பது, அவனை தனதாக்கிக் கொள்ள வீரமும் மிடுக்குடனும் திரிவது, அவனுக்காக அப்பாவுடன் சவால் விடுவது என வித்தியாசமாக ஆக Characterization அமைக்கப்பட்டிருக்கும். அந்த துடிப்பும் வேகமும் நிறைந்த முத்தழகாக பிரியாமணி கம்பீரமாக நடித்திருப்பார்.

லந்து லவுட்டு செய்யும் சண்டியராகவும் தனக்குள் காதல் வந்தவுடன் ஆண்களுக்குள் இருக்கும் வெட்கத்தை வெளிப்படுத்தும் வெள்ளந்தி என பருத்திவீரனாக தன் அறிமுக படத்திலேயே கார்த்தி அசத்தியிருப்பார். உயிர் குலைய வைக்கும் அந்த கிளைமேக்ஸில் இருவரும் தாங்கள் அதுவரை இருந்த கதாபாத்திர கோட்பாட்டில் இருந்து விலகி வேறு ஒரு நடிப்பு தளத்தில் நடித்திருப்பார்கள்.

செவ்வாழை,கழுவன்,குட்டி சாக்கு,பொணந்தின்னி,டக்லஸ் என மற்ற கதாபாத்திரங்களும் படத்தில் இவர்கள் கூடவே பயணித்திருப்பார்கள்‌.

தாய் 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்பது போல் யுவன் சங்கர் ராஜா மண் மணம் மாறாத நாட்டுப்புற இசையால் படத்தை தூக்கி நிறுத்தியிருப்பார்.

பாரதிராஜா 80's ,90‌'sகளில் இருந்த கிராமத்தை திரையில் காண்பித்தார். அதற்கு பிறகான தசாப்தத்தில் கிராமத்து மனிதர்களையும் அவர்களின் வாழ்வியலையும் அச்சு அசலாக காண்பித்த இயக்குனர் என்றால் அது அமீர் தான்.

Paruthiveeran - A Raw blood shedded love story set-up in village backdrop. 👏

- Prem ❤

Friday, February 12, 2021

உன்னாலே உன்னாலே :


ஆண் பெண் உறவு சிக்கல்கள் பற்றி பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பே பேசிய இப்படம், இன்றைய சூழலுக்கும் பொருந்தும் படமாகவே இருக்கிறது ( Ilamai Ullasam). 

ஆண்கள் கண்ணோட்டத்தை அதிகம் பேசியிருக்கும் இந்தப்படம், காதலில் பிரச்சினை ஆண்களால் மட்டுமே ஏற்படாது என்பதையும், பெண்களாலும் வரும் என்பதை விரிவாக விவாதிக்கிறது (Hello Miss Imsayae Aanadha thollai)

 ஒரு ஆணின் சூழல், அவனுக்கு ஏற்படும் காதல், அதில் அவன் சந்திக்கும் பிரச்சினை, அவன் மனதின் ஊசலாட்டம், பரிதவிப்பு, இயலாமை என புதியதாய் ஆண்களின் உளவியலை அழகாய் அணுகிய விதம் சிறப்பு. (June Ponal July Katrae)

ஒரு ஆணின் வாழ்வில் வரும் இரு பெண்கள், அவர்களால் இவனுக்கு கிடைக்கும் புதிய உலகம், காதலியுடன் யதார்த்த பிரச்சினை, பின் அவர்களின் நியாமான பிரிவை பற்றி இவ்வளவு Matured ஆக வேறு எந்த படமும் காட்டியதில்லை‌‌. (Mudhal Naal Indru Ethuvo Ondru)

ஒரு பெண் தன் காதலனை சரியாக புரிந்து கொள்ளதை எண்ணி தன் தவறை உணர்ந்த தாக வரும் Climax அட்டகாசம். ( Unnalae Unnalae Vin Aala Sendranae ) 

நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பது போல் காதலின் அருமை காதல் இல்லாமையில் தான் புரியும் என்பதை கார்த்திக் & ஜான்சி இருவருமே பல இடங்களில் உணர்வது படத்தின் the best thing. ( Siru Siru Uravugal Pirivugal)

 படத்தை Feel good ஆக Travel செய்ய வைத்ததற்கு மிக முக்கிய காரணம் ஹாரிஸ் ஜெயராஜின் பிண்ணனி இசை, அந்த காலகட்டத்தில் Harris craze உருவாக மிக முக்கியமாக அமைந்து இந்த படத்தின் பாடல்கள்.

இறுதியாக, இயக்குனர் ஜீவா‌. ஒளிப்பதிவாளரே படத்தின் இயக்குனர் என்பது எவ்வளவு பெரிய வரம். பாடல் காட்சிகள், Melbourneன் அழகு என கவிதையாய் கதை சொல்லி இருப்பார். Detailing சொல்கிறேன் என Over Expose செய்து இருந்து பெண்கள், Feministகளின் மனம் புண்பட கூடிய கதை களத்தை தன் Story Telling மூலமாகவும் Bore அடிக்காத Screenplay Flow மூலமாகவும் சரியாக அமைத்திருப்பார்... Really Miss Him..
Feel good movie of that(2k's) decade. 
- Prem ❤