Monday, December 6, 2021

Her (2013) :


Her என்ற இந்த மாயநதியை பார்த்த போது ஒவ்வொரு நிமிடங்களிலும் இதில் மூழ்கி போனேன். இதன் ஓட்டத்தில் லயித்து மயங்கி போனேன்‌. காதலின் உன்னதத்தை இவ்வளவு நேர்த்தியாக மனிதர்கள் மற்றவர்களாக படத்தில் இருந்தாலும் முதன்மை கதாபாத்திரமாக ஒருவரை மட்டும் வைத்து வந்த அழகான காதல் திரைப்படம்.

தனிமையில் உழன்று கொண்டிருக்கும் ஒருவனுக்கு தன் எண்ணங்களை பகிர, தான் பேசுவதை கேட்க, பேசும்போது உடன் உச்சு கொட்ட, கேள்விகளுக்கு சரியோ தவறோ ஏதேனும் ஒன்றை பதிலாக சொல்ல, சிரிக்க,அழ என துணைக்கு ஒரு நபர் கிடைத்தால்? இவன் செய்வதை போலவே அந்த இரண்டாம் நபரும் இவனுக்கு திருப்பி செய்தால்? அந்த இரண்டாம் நபர் ஒரு மெஷினாக(Programmed Software) இருந்தால்? அவனுக்கும் அந்த மெஷினுக்கும் காதல் மலர்ந்தால்? பேசி பேசியே Romance நிகழ்ந்தால்? தொட்டு பேசி கொள்ள வேண்டும் என்று ஏக்கம் வந்தால்? காதலில் Possessiveness எட்டி பார்த்தால்? காமம் இணைந்தால்? கடைசியில் பிரிந்தால்? இப்படி பலதரப்பட்ட கேள்விகளுக்கான விடையே Her.

காதலுக்கு நிஜம் - கற்பனை தேவையில்லை.
அருகாமை தேவையில்லை. உடல் தேவையில்லை. மனிதனின் எண்ணத்திலும் உணர்விலும் ஒன்று கலக்க ஒரு X Factor போதுமானது என்பதை படம் சொல்கிறது, அந்த X Factorஆக இயந்திரம் அமைகிறது. இதன் மூலம் காதலின் உச்சக்கட்டத்தை மனிதன் அடைகிறான். இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் இவ்வகையான காதலும் சாத்தியமே.

பேசி பேசியே காதல் வளர்ப்பது என்பது மனித இனத்தின் ஆகச்சிறந்த ஆற்றல். அந்த ஆற்றலில் சொக்கி -ஆழ்ந்து - நிலையற்று -  தொலைதூர எல்லைக்கு சென்று வெற்றி/ தோல்வி காண்பதிலே மனிதன் சுழன்று கொண்டிருக்கின்றான். இரு மனிதர்களுக்குள் காதல் நிகழ்வது போலவே ஒரு மனிதனுக்கும் Operating System கும் காதல் மொட்டாகி, துளிர்விட்டு, அரும்பாகி,மலர்ந்து,பூப்பூத்து, இறுதியில் வாடி உதிறுகிறது‌. இந்த நிகழ்வுகளின் பயணமே இப்படம்‌.

படத்தை அபாரமான நடிப்பால் தன் தோளில் சுமந்த Joaquin Phoenix ❤❤. சலனமில்லாத பிண்ணனி இசை & பல காட்சிகளில் இசையை ஒலிக்காமல் மௌனமாக விட்டதும், ஒரே நபர் அடிக்கடி ப்ரேமில் வந்தாலும் சலிப்பு தட்டாமல் அமைந்த ஒளிப்பதிவும் 👏👏.

படம் சொல்லவருவது "காதலின்றி மண்ணில் இன்பம் ஏதடா?".

- Prem ❤

No comments:

Post a Comment