Thursday, May 26, 2022

சில்லுக் கருப்பட்டி (2019) :


நான்கு கதைகள். நான்கு விதமான காதல்கள். ஒவ்வொரு கதையிலும் சொல்லப்படும் காதலின் மேன்மைகள். அதற்கு சிறப்பு சேர்க்கும் அழகான வசனங்கள். ஒவ்வொரு கதைகள் பார்த்து முடிக்கும் போது காதல் கவிதைகளை வாசித்த உணர்வுகள். இவை தான் சில்லுக்கருப்பட்டி.


தன் முந்தைய படமான பூவரசம் பீப்பீயில் குழந்தைகளை மையப்படுத்தி கதைகளத்தை அமைத்த இயக்குனர் ஹலிதா ஷமீம் காதலை கதைக்களமாக கொண்ட இப்படத்திலும் குழந்தைகளை சரியாக பயன்படுத்தியிருக்கிறார். சூழ்நிலைகளை மட்டுமே வில்லன்களாகவும் படத்தில் வரும் கதாபாத்திரங்களைகளை வில்லன்களாக சித்தரிக்காமல் நல்ல மனிதர்களை படம் முழுக்க தந்திருக்கிறார். அவர்கள் பேசுவதில் இருக்கும் நகைச்சுவை, நுணுக்கமான மனித உணர்வுகள், ரியாலிட்டி என வசனங்கள் அனைத்தும் அருமை. 


World of Sillu Karupatti :

1. Pink Bag : டீன்ஏஜ் காதல். தான் கொடுக்கும் அன்பு திருப்பி கிடைக்குமா என்று எதையும் எண்ணிப்பார்க்காமல் எந்த எதிர்பார்ப்புமின்றி பதின்மவயது சிறுவன் தனக்கு பிடித்த பெண்ணுக்கு காதல் ஈர்ப்பால் செய்யும் செயல்களே இக்கதை. 


2. காக்கா கடி : இள வயது காதல்‌. அன்பொன்று கிடைத்துவிட்டால் வாழ்வின் எந்த துயரத்திலும் இருந்து மீண்டு வந்து விடலாம் என்பதை உணர்த்தும் கதை. 


3. Turtles : முதிர் பருவ காதல்‌. எந்த வயது ஆனாலும் சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ள ஒரு துணை தேவை என்கிற மகத்துவத்தை சொல்லும் கதை‌.


4. Hey அம்மு : தம்பதிகளுக்கு இருக்கும் காதல்‌. கல்யாணம் ஆகி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டும் கருத்து வேறுபாடுகளின் பல ஏற்பட்டினும் அதை ஆராய்ந்து ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து காதலில் திளைக்க வேண்டும் என்று ஊடல் மூலமாக காட்சிகள் அமைந்த கதை.


இந்த நான்கு கதைகளும் உயிர்ரோட்டமாக இருக்க பெரிதும் துணையிருப்பது இசை. இப்படத்தின் இசையமைப்பாளரான பாடகர் பிரதீப்குமார் படம் முழுக்கவே மென் இசையோடு சேர்த்து மதி மயக்கும் தன் குரலில் ஹம்மிங் மூலமாக உயிர் கொடுத்தும் இருக்கிறார். இதற்கு உறுதுணையாக முதன்மை கதாபாத்திரங்களின் நடிப்பும், ஒவ்வொரு கதைக்கும் வெவ்வேறு ஒளிப்பதிவாளர்களின் விதவிதமான வண்ணங்களும் இதை எல்லாம் ஒன்று சேர்த்த ஹலிதாஷமீமின் எழுத்தும் இயக்கமும் படத்தை ரசிக்க வைக்கிறது.


-  Prem ❤