பொதுவாக காதல் திரைப்படங்களில் சொல்லப்படும் காதல்கள் எல்லாம் காதலன் காதலி இருவரும் காதலித்து கடைசியில் சேர்தல் அல்லது பிரிதல் என்பதை பற்றி தான். ஆனால் அதை சொல்லும் விதத்தில் தான் ஒரு சில படங்கள் மற்ற படங்களை விட தனித்து தெரிகிறது. அப்படி காதலை பற்றி தனித்துவமான விதத்தில் சொன்ன படம் தான் Annayum Rasoolum .
அன்னாவைவை பார்த்தவுடனே ரசூலுக்கு காதல் வருகிறது Normal ஆக. பிறகு அவன் தன் காதலை அவளிடம் சொல்கிறான் Natural ஆக. ஆரம்பத்தில் அவள் மறுக்கிறாள் default ஆக. பிறகு ஒரு சூழலில் அவள் அதை ஏற்கிறாள் Asusual ஆக. இருவருக்கும் காதல் மலருகிறது Common ஆக. இருவரும் காதலில் திளைக்கிறார்கள் Frequent ஆக. இந்த காதலை அறியும் அன்னாவின் குடும்பம் எதிர்ப்பு தெரிவிக்கிறது Typical ஆக என ஏற்கனவே பல காதல் படங்களில் General ஆக சொல்லப்பட்ட இக்காட்சிகள், இதில் புதுமையாகவும் தொய்வில்லாமலும் செல்வதற்கு முக்கிய காரணம் படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் Super ஆக நடித்த இருவரே.
ரசூலாக பகத் பாசில். இவரை Frameக்குள் வைத்து விட்டாலே போதும் மற்ற விஷயங்களை பற்றி பார்க்க விடாமல் தன் நடிப்பின் மூலமாகவே பார்த்து கொண்டிருப்பவர்களை கட்டி போட்டு வைக்கும் ஆற்றல் நிறைந்த அசாத்திய நடிகன்.
அன்னாவாக ஆண்டிரியா. படம் முழுக்கவே புடவையில் வலம் வந்து தன் சின்ன சின்ன முகபாவங்களின் மூலமாக அவ்வளவு அழகாக இருப்பார். இதுவரை இவர் நடித்த படங்களில் சிறந்த படம் என்றால் இது தான் சொல்ல வேண்டும். எதிரில் இருக்கும் பகத் பாசிலுக்கு ஈடு கொடுத்து அனாவின் பாத்திர படைப்பையும் உள்வாங்கி ரொமன்ஸ் செய்து என அவ்வளவு இயல்பாக நடித்திருப்பார்.
படத்தில் ஆகச்சிறந்த உருவாக்கம் எது என்றால் ரசூல் அன்னாவை Approach செய்யும் விதமே. தவிப்பு, காதல், ஏக்கம், சந்தோஷம், குற்ற உணர்வு என எல்லாமும் தாண்டவம் ஆடும் பகத்தின் நடிப்பும் அதை இயக்குனர் காட்சி படுத்திய விதமும் Too Good 👌👌.
கொச்சி Fort ஐ சுற்றியுள்ள லொக்கேஷன், படகுத்துறை, Small town ல் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்கள் ரம்மியமான இசை என படத்தில் அமைந்த கூடுதல் சிறப்புகள்.
படம் கொஞ்சம் மெதுவாக நகர்ந்தாலும் காதலை அழகாக இயல்பாக சொன்ன விதத்தில் மலையாள சினிமாவில் வந்த மற்றொரு அழகான பீல் குட் திரைப்படம்..
- Prem ❤
No comments:
Post a Comment