படத்தில் மூன்று விதமான காதல் உணர்வுள்ள பெண்கள் ஒரு ஆணின் வாழ்க்கையின் வெவ்வேறு காலகட்டங்களில் வருகிறார்கள்.
1. ஸ்டெல்லா: தான் விரும்பும் ஆண் நண்பனிடம் வெளிப்படையாக தன் காதலை சொல்பவள்.
2. சுபாஷிணி: தன் காதலை தனக்குளே மறைத்து வைத்து அந்த ஆணுடன் நட்புடன் பழகுபவள்.
3. அன்பு செல்வி: தன்னை பிடித்ததாக வந்து சொல்லும் தனக்கு ஓரளவுக்கு பரிச்சியப்பட்ட ஆணிடம் தன் அப்பாவின் கல்யாண சம்மதத்துடன் காதலிக்கும் கிராமத்துப் பெண்.
- இந்த மூவரையும் நன்றாக புரிந்து கொள்ளும் தர்மதுரை, ஸ்டெல்லாவிடம் தன் இள வயதையும் சூழ்நிலையையும் எடுத்து சொல்லி எதிர் காலத்தில் உனக்கு இதே அன்பு என் மேல் இருந்தால் அப்போது திருமணம் செய்து கொள்ளலாம் என்பதும், சுபாஷிணி தன் கணவனை பிரிந்து வாழ்ந்தாலும் அவள் கல்லூரியில் தன்னை ஒரு தலையாய் காதலித்தாக தெரிந்த பிறகு அதனுடே இனி நாம் living together வாழ்க்கை வாழலாம் என்பதும், அன்பு செல்வியின் ஆசைபடியே பெண் பார்க்கும் படலம் முடிந்து பெற்றோர் சம்மதத்துடன் முழுமையாக காதலிப்பது என தர்மதுரை Mature ஆக கையாள்வது என ஆண்-பெண் உறவு, காதல், உளவியல் தான் இந்த படத்தின் ஆகச் சிறந்த சிறப்பு.
படத்தை தன் தோளில் சுமப்பது விஜய் சேதுபதி. தன் வாழ்க்கையில் நிகழும் Active - inactive, Pause - restart, மூன்று பெண்களின் காதலை கையாளும் விதம் என பல்வேறு நிலைகளை நடிப்பால் வெளிப்படுத்தியிருப்பார். தன் மகன் வாழ்க்கையை வெறுத்து தோல்வியில் இருக்கும் போது அவனுக்கு துணை நிற்பதும், தன் மகன் கோபத்தில் கொலை செய்ய துணியும் போது அவனை தடுத்து கட்டியணைத்து ஆறுதல் படுத்துவதும், மற்றவர்களால் தன் மகன் உயிருக்கு ஆபத்து வரும் போது அவனை வீட்டை விட்டு வெளியேற்றி அவனை காப்பாற்றுவதும் என ராதிகா ஒரு கிராமத்து தாயை அவ்வளவு அழகாக நடித்திருப்பார்.
மேலும் படத்தில் இலவச மருத்துவம், மருத்துவர்களின் கண்ணியம், மாணவர்களுக்கு ஆசிரியர் மேல் இருக்கும் மரியாதை, அந்த ஆசிரியருக்கு காமராஜர் மேல் இருக்கும் மரியாதை, பெண்ணின் அன்பால் குடி பழக்கத்தில் இருந்து மீண்டு வருவது,திருநங்கையின் கஷ்டம்,மறுமணம், கால்நடைகள்,மலைகிராமம், கிராமத்தின் எளிய மக்கள், கோயில்கள்,வயல்வெளி, நூலகம், கணவாய் என இவ்வளவையும் விரிவாக Nativity + geography சேர்த்து தந்த சீனு ராமசாமி சமகால இயக்குனர்களின் ஆக சிறந்த படைப்பாளி..
- Prem ❤
No comments:
Post a Comment