காதலர்களுக்கு வயது ஆகலாம். ஆனால் காதலுக்கு வயதாகாது என்பது மானுடவியல் வழக்கம். Fall in love, Being in love, Moving in love என காதலின் பரிமாணங்களை யார் வேண்டுமானாலும் நிஜத்தில் அனுபவிக்கலாம். அந்நிலைகளை திரை வழியாக இரண்டு கதாபாத்திரங்களை வைத்து - மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் அவர்களை பொருத்தி - காதலில் திளைக்க வைத்து - அவர்களின் மகிழ்ச்சியை நமக்கும் கடத்தி - நம்மையும் சிரிக்க அழ வைத்து - நமக்குள் இருக்கும் பிரிந்த காதல்,தொலைந்த காதல்,மறந்த காதல்,கூடிய காதல் என பல்வேறு காதல்களை நினைத்து பார்க்க வைக்க வெளிவந்த படங்களே Before Sunrise (1995), Before Sunset (2004) and Before Midnight (2013).
Jessie & Celine இருவரும் ரயிலில் முதன் முறையாக சந்திக்கிறார்கள். Casual ஆக பேச ஆரம்பிக்கிறார்கள் - பேசுகிறார்கள் - பேசி கொண்டே இருக்கிறார்கள் - பேசிப்பேசி பொழுதை கழிக்கிறார்கள் - நகர்வலம் வருகிறார்கள். உரையாடல் வழியாக தங்கள் வாழ்வின் நடந்தவைகளை, தங்களின் ஆசைகளை, கருத்துக்களை நம் எண்ணங்களில் கிளைகதைகளாய் பரவ விடுகிறார்கள். அதன் பிறகு தங்களின் உறவை எப்படி அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறார்கள் என்பதே மூன்று பாகங்கள்.
காதலை கொண்டாடுதல் என்பது தனி கலை. அப்படிப்பட்ட கலையின் மேன்மையை அதிரிபுதிரியான நிகழ்ச்சிகளை அடுக்கி Complexity சம்பவங்களால் கதையை நகர்த்தாமல் 'பேச்சுத்துணை' என்ற Conceptஜ வைத்து கனவில் நிஜமாய் நிஜத்தில் கனவாய் வசனங்களை நிறைத்து சிறு பயணமாய் போல் மென்மையாக்கி இருப்பதே இப்படங்களின் சிறப்பு.
பல Single Shot காட்சிகள். அதில் இருவரும் மட்டுமே பேசி கொள்ளும் உரையாடல் போன்ற வசனங்கள். நடிப்பு என சொல்ல முடியாத அளவுக்கு நிஜ காதலர்களாய் வாழ்ந்த இருவர். அருமையான Backdrop லொக்கேஷன்கள். நேர்த்தியான எழுத்து & இயக்கம். இவை அனைத்தும் தான் இந்த Trilogy க்கு உயிர் கொடுத்திருக்கும் பங்களிப்புகள்.
நம்மை கொண்டாடுபவர்கள் நம் அருகில் இருத்தலிலும் வாழ்க்கை முழுவதும் உடன் பயணித்தலிலும் தான் வாழ்வின் சிறப்பே இருக்கிறது. அதற்கு பெரும் பங்காய் காதல் அமைகிறது. இந்த கருத்துடன் Positivity விதைக்கும் விதமாக ஒருவர் நினைத்து பார்க்க Sweet Memories, Bitter Sweet Memories என காதலில் பல்சுவை உள்ளது என்ற மகோத்துவத்தை நமக்குள் விதைக்கும் படைப்பாகவே இந்த Trilogy உள்ளது.
Spread Love 
-Prem 

No comments:
Post a Comment