காதல் இல்லாமல் பழகும் ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் அன்பும் நட்பும் அக்கறையுமே திளைத்தோங்கும். கூடவே இவர்களுக்குள்ளும் வரும் கோபங்களும் முரண்பாடுகளும் சிறிது கால பிரிவுகளும்.
குறைபாடுகளை தகர்த்து அதனுள் ஊடுருவி நிறைகளை தேடுவது அன்பு. தங்களுக்கு அமைந்த வாழ்க்கை சூழலில் இரண்டு Extreme குறைபாடுகளில் இருக்கும் இருவருக்குள் நடக்கும் நிகழ்வுகளே Hey Jude.
Autism(மதியிறுக்கம்) குறைப்பாடுள்ள ஜூடும் Bipolar Disorder (இருமுனை பிறழ்வு) குறைப்பாடுள்ள கிரிஸ்டலும் ஆரம்பத்தில் மோதலில் சந்தித்து சண்டையிட்டு பிறகு கொஞ்சம் கொஞ்சமாய் ஒருவருக்கொருவர் மற்றவருக்கு இருக்கும் குறைபாடுகளை அறிந்து அதில் இருந்து வெளி வர உதவி செய்து கொள்கிறார்கள் நண்பர்களாய். அவர்களால் முழுதும் தங்களை மாற்றிக் கொள்ள முடிந்ததா? மற்றவரை புரிந்துகொள்ள முடிந்ததா? என்பதை பற்றி மென் நகைச்சுவை கலந்து யதார்த்தமாக படம் பேசுகிறது.
படத்தில் முதலில் கவனிக்க பட வேண்டியது முதன்மை கதாபாத்திரங்களின் Characterization. உலகத்தோடு தன்னை இணைத்து கொள்ளாத ஜுடுக்கு கடல் சார்ந்த விஷயங்கள் ( Oceanography) பிடிப்பதே போல் அமைத்ததும், கோபம் சோர்வு என இரண்டிலும் பயணிக்கும் கிரிஸ்டலை இசையோடு இணைத்ததும் இயக்குனரின் Brilliance. இருவரின் தந்தை கதாபாத்திரங்களும் கவனிக்கப்பட வேண்டியதே.
மலையாள நடிகர்களில் நான் பார்த்து வியந்தது - தங்களின் Star value ஏற்ற கதைகளை தேர்வு செய்யாமல் தங்களுக்கு வரும் Scriptல் இருக்கும் கதாபாத்திரங்களில் தங்களை பொருத்தி கொள்ளுவது தான். Autism குறைபாடுள்ள இளைஞனாக பிசகாமல் வித்யாசமான Mannerism காட்டி அதே வேளை இயல்பாகவும் படம் முழுக்க ஜூடாக இருக்கிறார் நிவின் பாலி. கிரிஸ்டலாக நம் திரிஷா, மலையாளத்தில் இது இவருக்கு முதல் படம். எப்படி லேசா லேசா வில் தன்னை சுற்றிய கதை அமைந்ததோ அதோபோல் இதிலும் ஜீட்க்கு நிகரான கதாபாத்திரம்.
ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன். அங்கமாலி டைரிஸ்,சர்க்கார்,ஜல்லிக்கட்டு போன்ற படங்களில் தன் திறமையை நிரூபித்தவர். 75 சதவீத படம் கோவாவில் நடப்பதால் இதிலும் Fresh ஆக தன் ஒளி ஓவியத்தை நிகழ்த்தியுள்ளார்.
உலகத்திற்கு வித்தியாசமாக தெரிந்தாலும் தங்கள் உலகத்திற்கும் தங்களுடன் இருக்கும் மனிதர்களுக்கும் Special ஆக இருப்பவர்களின் வாழ்வியலே Hey Jude.
- Prem ❤
No comments:
Post a Comment