Dear Comrade :
தமிழ் சினிமா தன்னை ஒவ்வொரு காலகட்டத்திலும் பலவிதமாக தகவமைத்து கொள்ளும். ஒரே மாதிரியான கதைகள் வந்து கொண்டிருக்கும் போது யாரோ ஒரு புது இயக்குனர் தேவதூதன் போல் வந்து ஒரு விருட்சத்தை விதைத்து விட்டு ரசிகர்களின் ரசனையை உயரத்துவார். அப்படி 2012 ல் தமிழ் சினிமா வரலாற்றில் பல சென்டிமென்ட்களை உடைத்து தன் ஒவ்வோர் படைப்பில் வாயிலாக சமூகத்தை அக்கறையோடு அணுகும் கலகக்காரனே இயக்குனர் பா. ரஞ்சித்.
டைட்டில் சென்டிமென்ட் பார்க்கும் தமிழ் சினிமாவில் தன் முதல் படத்திலேயே "அட்டகத்தி" என்ற தலைப்பை வைத்து கதை சொல்லும் பாணியில் புதுமையை புகுத்தி "யார் இவர்?" என்ற கேள்வியை உருவாக்கியது.
தமிழ் சினிமாவில் வடசென்னை பகுதியை தவறாக சித்தரித்து கொண்டிருந்த பல இயக்குனர்களுக்கு மத்தியில் அதன் உண்மை முகத்தையும் அந்த மக்களின் வாழ்வியலையும் அவர்களை சூழ்ந்துள்ள அரசியலையும் "மெட்ராஸ்" என்ற பெயர் மூலமாக தமிழ் சினிமாவிற்கும் அந்த இயக்குனர்களுக்கும் வெளிச்சம் போட்டுக் காட்டிய சுடர் ஒளி.
"கபாலி" என்ற பெயரை வில்லனின் அடியாட்களாக வரும் துணை கதாபாத்திரங்களுக்கும் நகைச்சுவை கதாபாத்திரங்களுக்கும் வைத்து கொண்டிருந்த மட்டுமே வந்த படங்களுக்கு மத்தியில் ஒரு திரைப்படத்தின் தலைப்பாக வைத்து கதாநாயகனுக்கு அந்த பெயரை சூட்டி தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரத்தையே அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார்.
காலாவில் கருப்பு+நீலம்+சிவப்பு வண்ணங்கள், தான் தயாரித்த பரியேறும் பெருமாளில் சாதிய அரசியலின் கோர முகம் என தான் இயக்கும் தயாரிக்கும் படங்களில் சமூகநீதி பேசும் நிஜ போராளி.
மேலும் பொதுவெளியில் Casteless Collective, கூகை திரை நூலகம், வானம் கலை திருவிழா என தன்னை சமூக செயல்பாட்டாராகவும் தன் செயல்களை பதிவு செய்து கொண்டிருக்கிறார்.
அவர் எழுதிய வசனம் அவருக்கே என்றும் பொருந்தும் படியாக இருக்கிறது - "நான் கால் மேல கால் போட்டு உக்காரருது தான் உன் பிரச்சினைனா நான் கால் மேல் கால் போட்டு தான் உக்காருவேன்டா ஸ்டைலா கெத்தா".
- Prem ❤
No comments:
Post a Comment