Sunday, August 23, 2020

குட்டியும் ஸ்ரீதரும் (துள்ளாத மனமும் துள்ளும் - முகவரி) :

இந்த இரு கதாபாத்திரங்களுக்கும் வெவ்வேறு விதமான வாழ்க்கை சூழல்,காதல்,கோணங்கள் என இருந்தாலும் இருவரையும் இணைக்கும் ஒரே புள்ளி "இசை" என்பதால் என்னவோ அவர்களின் உணர்வுகள், எண்ணங்கள்,ஆசைகள் என இருவரும் ஒரே நிலைப்பாட்டில் இருப்பதாக தோன்றுகிறது (In my opinion).

எட்டு வருட சிறை தண்டனையால் தன் வாழ்க்கையை தொலைத்து சிறையில் இருந்து விடுதலை பெற்று வரும் குட்டி -
எட்டு வருடமாக இசையமைப்பாளர் ஆக வேண்டும் என்ற கனவோடு முயற்சித்து கொண்டிருக்கும் ஸ்ரீதர்.
இரு மனங்கள் விரும்புவதே காதல் என்பது போல்,
தன் குரலில் பாடும் பாடலால் நேரில் பார்க்காமலேயே தன் கனவுதேவதை ருக்குவை கவரும் குட்டி - ஒருமுறை சந்தித்த விஜியை தன் குரல் வளத்தால் ஹம்மிங் மூலம் கவரும் ஸ்ரீதர்.
நேரில் தவறான சூழ்நிலைகளால் தான் ஒருதலையாக காதலிக்கும் ருக்குவால் வெறுக்கப்பட்ட குட்டி - தன் கனவுக்காக நிஜ வாழ்க்கை காதலையே துறக்கும் ஸ்ரீதர்‌.
ருக்குவிற்கு கண் பார்வை போன பிறகு அவளால் அதிகம் நேசிக்கப்படும் குட்டி - தனக்கு வரும் வாய்ப்பு ஒவ்வொரு முறை தவறும் போதும் உறுதுணையாக நிற்கும் காதலில் திளைக்கும் ஸ்ரீதர்.
ருக்குவும் குட்டியும் சேர்ந்து விட வேண்டும் என்று துடிக்கும் வைன்ஷாப் ஓனரை தன் நன்நடத்தையால் சம்பாதித்திற்கும் குட்டி - தான் இசையமைப்பாளர் ஆக வேண்டும் என்று முனைப்புடன் இருக்கும் சக மனிதரான சிடி கடைக்காரரை நன்மதிப்பை பெற்ற ஸ்ரீதர் (இந்த இரண்டு கடைக்காரர் கதாபாத்திரத்தை செய்யததும் மணிவண்ணன்)
அம்மா இறந்தவுடன் அவர் கண்ணை ருக்குவுக்கு தானம் செய்ய தன் கிட்னியை துறக்கும் குட்டி - அண்ணனுக்கு உடல் நலம் குன்றியவுடன் குடும்பத்தை வழிநடத்த தன் கனவையும் கொள்கைகையும் விட்டு கொடுக்கும் ஸ்ரீதர்.
பல வித போராட்டங்களுக்கு பிறகு இறுதியில் பாடல் பாடியே காதலியை கரம் பிடிக்கும் குட்டியும் பாட்டிற்கு மெட்டமைத்து இசையமைப்பாளர் ஆகும் ஸ்ரீதரும் ஜெயிப்பது இசையின் துணையாகவே.
முரணாக, ஸ்ரீதருக்கு ஏற்ப அமைந்துள்ளன இவ்வரிகள்
"தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும்
தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும்
அட பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே"
and
குட்டிக்கு ஏற்றவாறு "காற்றெல்லாம் இனிக்கும்படி கண்ணாளா காதுக்குள் பாட்டுப்படி
என் காலும் நடக்கட்டுமே என் தேவா
உன் மார்பில் சாய்ந்தபடி".
-
Prem ❤

Monday, August 17, 2020

Django Unchained

 Rewatched Django Unchained after 5 years. சிறப்பான தரமான சம்பவம் From Quentin Tarantino.

முன்னமே பாக்கும் போதே Engagableஆ இருந்துச்சு. இப்போ ஒவ்வொண்ணா புரிதலோட தெரிஞ்சுகிட்ட உலக விஷயங்கள் like Black-White பின்னாடி இருக்க நிறவெறி, Politics behind usage of the word 'Niggar', Slavery on oppressed people, மனுஷன மனுஷனே ஒதுக்கி வைக்கிறது, Knowledge about Knowing QT style of ரத்தம் தெறிக்கும் film making, Samuel L Jackson ஓட other performance லாம் பத்தி புரிஞ்சுகிட்டு இப்போ பாக்கும் போது நிறைய விஷயங்கள் புலப்படுத்து.
படத்துல வர மாஸான Performance க்கு Jamie Foxx , கிளாசான Performanceக்கு. Christoph Waltz, வில்லத்தனமான role க்கு Leonardo DiCaprio & Samuel Jackson னு அட்டகாசமான Casting. DiCaprio வில்லனா இன்னும் நிறைய படங்கள் பண்ணலாம். படத்துக்கு மிகப்பெரிய பலம் இசை, முழுக்கவே செம மாஸா தனித்தனியா ஒவ்வொரு Portionக்கும் தீம் போட்டு தள்ளியிருக்காங்க‌. கூடவே Stylishஆன Cinematography வேற.
Django remains me of Kabali interms of things like Searching & Finding of wife by husband, Redemption,Waltz's look & costumes had resemblance of Kabali Characterization etc. இதுல Action Block ஒவ்வொன்னும் அடிப்பொலி‌. சும்மாவே Tarantino படத்துல Gun விளையாடும் ரத்தம் தெறிக்கும், இது Cow-boy kinda Genre வேற சொல்லவா வேணும். மனுஷன் இஷ்டத்துக்கு பூந்து விளையாடி இருக்காப்படி‌‌.
சினிமா ங்கற கலை நம்ம அறிவை வளர்க்கறது மட்டும் பயன்படுறது இல்ல. அது நம்ம அறிவை Update பண்ணிக்கவும், ஒரு விஷயத்தை இன்னும் அகலமாக பரந்து பார்க்கவும் வைக்குது‌, பல விஷயங்கள ஒவ்வொரு தடவையும் புதுசு புதுசா தெளிவு படுத்தி பாக்கவும் வைக்குது.

- Prem ❤

Sunday, August 9, 2020

The Before Trilogy :


காதலர்களுக்கு வயது ஆகலாம். ஆனால் காதலுக்கு வயதாகாது என்பது மானுடவியல் வழக்கம். Fall in love, Being in love, Moving in love என காதலின் பரிமாணங்களை யார் வேண்டுமானாலும் நிஜத்தில் அனுபவிக்கலாம். அந்நிலைகளை திரை வழியாக இரண்டு கதாபாத்திரங்களை வைத்து - மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் அவர்களை பொருத்தி - காதலில் திளைக்க வைத்து - அவர்களின் மகிழ்ச்சியை நமக்கும் கடத்தி - நம்மையும் சிரிக்க அழ வைத்து - நமக்குள் இருக்கும் பிரிந்த காதல்,தொலைந்த காதல்,மறந்த காதல்,கூடிய காதல் என பல்வேறு காதல்களை நினைத்து பார்க்க வைக்க வெளிவந்த படங்களே Before Sunrise (1995), Before Sunset (2004) and Before Midnight (2013).
Jessie & Celine இருவரும் ரயிலில் முதன் முறையாக சந்திக்கிறார்கள். Casual ஆக பேச ஆரம்பிக்கிறார்கள் - பேசுகிறார்கள் - பேசி கொண்டே இருக்கிறார்கள் - பேசிப்பேசி பொழுதை கழிக்கிறார்கள் - நகர்வலம் வருகிறார்கள்‌‌. உரையாடல் வழியாக தங்கள் வாழ்வின் நடந்தவைகளை, தங்களின் ஆசைகளை, கருத்துக்களை நம் எண்ணங்களில் கிளைகதைகளாய் பரவ விடுகிறார்கள். அதன் பிறகு தங்களின் உறவை எப்படி அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறார்கள் என்பதே மூன்று பாகங்கள்.
காதலை கொண்டாடுதல் என்பது தனி கலை. அப்படிப்பட்ட கலையின் மேன்மையை அதிரிபுதிரியான நிகழ்ச்சிகளை அடுக்கி Complexity சம்பவங்களால் கதையை நகர்த்தாமல் 'பேச்சுத்துணை' என்ற Conceptஜ வைத்து கனவில் நிஜமாய் நிஜத்தில் கனவாய் வசனங்களை நிறைத்து சிறு பயணமாய் போல் மென்மையாக்கி இருப்பதே இப்படங்களின் சிறப்பு.
பல Single Shot காட்சிகள். அதில் இருவரும் மட்டுமே பேசி கொள்ளும் உரையாடல் போன்ற வசனங்கள். நடிப்பு என சொல்ல முடியாத அளவுக்கு நிஜ காதலர்களாய் வாழ்ந்த இருவர். அருமையான Backdrop லொக்கேஷன்கள். நேர்த்தியான எழுத்து & இயக்கம். இவை அனைத்தும் தான் இந்த Trilogy க்கு உயிர் கொடுத்திருக்கும் பங்களிப்புகள்.
நம்மை கொண்டாடுபவர்கள் நம் அருகில் இருத்தலிலும் வாழ்க்கை முழுவதும் உடன் பயணித்தலிலும் தான் வாழ்வின் சிறப்பே இருக்கிறது. அதற்கு பெரும் பங்காய் காதல் அமைகிறது‌. இந்த கருத்துடன் Positivity விதைக்கும் விதமாக ஒருவர் நினைத்து பார்க்க Sweet Memories, Bitter Sweet Memories என காதலில் பல்சுவை உள்ளது என்ற மகோத்துவத்தை நமக்குள் விதைக்கும் படைப்பாகவே இந்த Trilogy உள்ளது.
Spread Love ❤
-Prem ❤

Wednesday, July 29, 2020

M. Night Shyamalan's Triology Movies :


It is very tough to handle psychological things in one script & executes it in a very well crafted manner. But this man succeeded with all these elements perfectly in three different parts repeatedly & efficiently. First part of this Triology named UNBREAKABLE released in 2000, second installation SPLIT came after 16 years of prior (2016) & third one GLASS released on 2019.

As a recent watcher of all these movies, for me 'Unbreakable' set up premise on what it's gonna be, 'Split' adds more hype & 'Glass' fulfilled my expectations. Satisfactory Graph increased at peak over each part & got mind orgamized highly.

What I have analysed in his working style is - He started story telling by blind folding the audience & revealing the knots with bunch of surprises throughout the film. Liked the way he connects/ differentiates two extreme characters in first part and introduces yet another ironical character in second part & gave justified conclusion for all those in final part.

He is very much brilliant in creating three different characters, setup backstory for them, added their own point of view,assembling them, holding them, them, confronting them, behaving them & finally concluded them.

For executing this kinda complexity writing, one hardly needs brilliant actors to understand the whole process of what they are going to be to, absorbs the need & nature of the demand for their characterization, knows what to perform on screen. For matching all these criteria, three brilliant performers Samuel L.Jackson,Bruce Wills,James McAvoy fitted themselves in script & they did extraordinary job both physically and mentally. I was astonished by all of their performance.

Not only actors- well made technical aspects like hard hitting dialogues, haunting music, raw cinematography also makes this Triology masterpiece.

M.Night Shyamalan - A Mastermind Creator.

- Prem 

Sunday, July 26, 2020

Parava 🐦 (2017) - Malayalam



படத்தின் மையப்புள்ளி புறாக்கள்.அந்த புறாக்களை சுற்றி வாழும் பல விதமான குணாதிசயம் கொண்ட மனிதர்கள்.அந்த மனிதர்களை பின்னி பிணைக்கும் காதல்,நட்பு, பகை,உறவு,போட்டி என புதியதொரு கதைக்களத்தில் பயணிக்கும் மற்றொரு feel good மலையாள திரைப்படம்.

கேரளாவில் இயற்கை பகுதியை விடுத்து இதில் கொச்சியில் இருக்கும் Mattenchery (மட்டன்சேரி) என்னும் நகரத்தில் கூட்டாக ஒரு பகுதியில் வாழும் இஸ்லாமிய மக்களின் வாழ்வியலில் உள்ள குடும்பம்,தொழில்,கிரிக்கெட், கேரம், உணவு, விழாக்கள், இண்டு இடுக்களிலுள்ள குடியிருப்புகள், செல்ல பிராணிகள் என எல்லாவற்றையும் பேசுகிறது இப்படைப்பு.

எந்த பிரச்சனை வந்தாலும் அதை மறந்து விட்டு அடுத்த சந்தோஷத்தில் மூழ்கும் இரண்டு சிறுவர்கள், ஒரு பிரச்சினையால் தன் வாழ்க்கையை வெறுத்து தனிமையில் வாழும் Introvert ஆக மாறிப்போன இளைஞன், மகன்கள் மேல் கண்டிப்பும் அக்கறையும் நிறைந்த அப்பாக்கள், அன்பு நிறைந்த அம்மாக்கள், கும்பலாக சுற்றும் நண்பர்கள், அந்த கும்பலுக்கு தலைமை ஏற்று மற்ற நண்பர்களுக்கு சகோதரனாய் இருக்கும் சக நண்பன், போதை பழக்கத்தில் அடிமையான கூட்டம் என ஒவ்வொரு கதாபாத்திரமும் நம்மை ஈர்க்கிறது.

புறா வளர்ப்பதில் உள்ள நுணுக்கங்கள், அதை பேணி பாதுகாத்தல், அதை வைத்து நடத்தப்படும் Tournament (பந்தயம்), பள்ளி பருவத்தில் மாணவர்களுக்கு ஏற்படும் infatuation, சிறு வயது- இளமை கால - முதிர் பருவ நட்பு வட்டம், பட்டம் விடுவதற்கு பயன்படும் மாஞ்சா நூல் தயாரிக்கும் முறை, இஸ்லாமிய மக்களின் வாழ்க்கை முறை என படத்தில் சொல்ல பட்ட விஷயங்கள் அனைத்தும் புதுமை.

முதல் காட்சியில் மற்றோரு வீட்டில் இருந்து மீனை திருடி வரும் சிறுவர்கள் படத்தின் இறுதி காட்சியில் வேறோரு வீட்டில் நாய் குட்டியை சேர்த்து விடுவது போல் அமைத்ததில் தெரிகிறது எழுத்தாளர்+ இயக்குனரின் திறமை..
Parava - Yet another feel good Malayalam movie which deals with emotions & culture among certain area people..

- Prem

Saturday, July 18, 2020

நீ நான் சிவம்

அன்பே சிவம் (2003) :

படத்தில் ஒரு காட்சியில் மாதவன் குளிப்பதற்காக ஷவரை(Shower) திறப்பார், loose ஆக இருக்கும் அந்த ஷவரின் Nozzle(முனை) கழன்று நச் என்று அவர் மண்டையில் விழும், வெளியில் இருந்து கமல் அந்த nozzle  பற்றி முன் எச்சரிக்கை செய்து கொண்டிருப்பார். அது போல் தான் கமல் என்னும் திரைக்கலைஞன் படம் முழுக்க அன்பையும் மனிதத்தையும் நம் மண்டையில் நச் என்று விழுவது போல் நன்றாக உரைக்கும் படி சொல்லிக்கொண்டே இருப்பார்.

எனக்கு அன்பு பிடிக்காது என ஆரம்பத்தில் சொல்லும் அன்பரசு இறுதியில் நல்ல சிவத்தை தன் அண்ணணாக ஏற்று கொள்ளவதே அன்பே சிவம். கடவுள் என தனியாக ஒன்று தேவையில்லை சக உயிர்களிடத்தில் அன்பை காட்டுபவர்கள் யாவரும் கடவுளே என்பதை பல்வேறு நிகழ்வுகள், கதாபாத்திரங்கள் மூலம் கமல் என்னும் மகா கலைஞன்.

படத்தில் கம்யூனிசம் பற்றிய கருத்துக்கள் ஆழமாக பசுமரத்தாணிப் போல் பேச பட்டிருக்கும். தன் அனுபவ நடிப்பாலும் அசாத்திய முக பாவனைகளாளும் கமல் சிவப்பு சட்டை போட்டு கொண்டு அதை செவ்வன பேசியிருப்பார்.

செய்வது எல்லாம் செய்து விட்டு கடவுளை துணைக்கு அழைத்துக் கொள்ளும் நாசர் கதாபாத்திரத்தை வித்தியாசமாக அமைத்ததுலாம் கமலின் அக்மார்க் குசும்பு

முன்ன பின்ன தெரியாத ஒருத்தருக்குகாக அழுகற மனசு இருக்கே அது தான் கடவுள் , என்னை கொல்ல வந்துட்டு மனச மாத்தீட்டு கொல்லாம போறயே நீ தான் கடவுள் என கடவுள் என்பவர் யார்? என்பதை உணர்த்தும் மதனின் வசனத்திற்கு தன் நடிப்பால் உயிர் ஊட்டியிருப்பார் கமல்.

ஒரு விதை போட்டால் பல வருடம் கழித்தே பலன் தரும் என்பது போல் கமல் 2003 ஆண்டு போட்ட அன்பே சிவம் என்ற விதையை இன்று அதன் பலனை உணர்ந்து அனுபவித்து நாம் கொண்டாடி கொண்டிருக்கிறோம் அன்று விதைத்தவருக்கு பேரிழப்பை தந்து...

Though it's adapted from Hollywood movie named "planes trains & automobiles", we have to appreciate Kamal's effort for bringing this movie not commercial or profitable movies.